ரு படத்தின் ஷூட்டிங்கிற்கு குறைந்தபட்சம் இரண்டு வருடம், போஸ்ட் புரொடக்ஷனுக்கு ஒரு வருடம் என்பதெல்லாம் டைரக்டர் ஷங்கருக்கு சர்வசாதாரணம். இந்த சர்வசாதாரணத்தை மிகசர்வசாதாரணமாக தாங்கும் வலிமையுள்ளவர்களே தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கும் போவதுண்டு.

Advertisment

sa

இதற்கு உதாரணம் "ஆஸ்கார் பிலிம்ஸ்' வி.ரவிச்சந்திரன். வரிசையாக மெகா ஹிட் படங்களைத் தயாரித்து வந்த ரவிச்சந்திரனுக்கு, முதன்முதலாக விக்ரமை வைத்து 2005-ல் ‘"அந்நியன்'’ படம் பண்ணினார் ஷங்கர். போட்ட பட்ஜெட்டைவிட தாறுமாறாக எகிறினாலும் தனது வியாபாரத் திறமையால் படத்தை நல்ல விலைக்கு விற்று ஓரளவு தப்பித்தார் ரவிச்சந்திரன். ஆனால் பல ஏரியாக்களில் ‘‘"அந்நியன்'’’ சரிவர போகாததால், அடுத்தடுத்த படங்களில் சரிக்கட்டி வந்த ரவிச்சந்திரன், பத்து ஆண்டுகள் கழித்து 2015-ல் மீண்டும் ஷங்கர்-விக்ரம் காம்பினேஷனில் ‘"ஐ'’ படத்தை ஆரம்பித்தார்.

இழுஇழு என இழுத்து விக்ரமையும் பாடாய்படுத்தி ஒருவழியாக ரிலீஸ் ஆன "ஐ'’ படத்தால், கோலிவுட்டில் பலரும் ’"ஹூ ஆர் யூ?'’என கேட்கும் நிலைக்கு ஆளானார் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். தயாரிப்பில் இருந்த சில படங்களை பாதியுடன் நிறுத்திய ரவிச்சந்திரனுக்கு பெரிய இடியாக வந்திறங்கியது கமலின் ‘"விஸ்வரூபம்-2'. அந்தப் படம் பல ரூபங்களில் கடனாளியாக்கிய சோகம், ஆஸ்கார் ரவியால் இப்போது வரை எழுந்திருக்கவே முடிய வில்லை.

Advertisment

ரஜினியை வைத்து ஷங்கர் எடுத்த "எந்திரன்'’ படமும் "ஐ'’படம் போல் ஆகவேண்டியது. ஆனால் படத்தை அண்டர்டேக் பண்ணியது "சன் பிக்சர்ஸ்' கலாநிதி மாறன் என்பதால், ஷங்கரின் ஸ்டைல் செல்லுபடியாகவில்லை.

s

"எந்திரன்'’ வெற்றியால் ரஜினி-ஷங்கர் காம்பினேஷ னில் "2.ஞ' படத்தை ஆரம்பித்தார் லைக்கா சுபாஷ்கரன் அல்லிராஜா. அந்தப் பட ஷூட்டிங்கின் ஆரம்ப கட்டத்திலேயே, அதாவது 2018-லேயே ரஜினியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு சில மாதங்கள் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. தனது உடல்நலன் ஒத்துழைக்காத தால் இனியும் தொடர முடியாது என்ற முடிவுக்கு வந்த ரஜினி, சுபாஷ்கரனை அழைத்து, இதுவரை இப்படத்திற்கு ஆன செலவைக் கொடுத்துவிட்டு, படத்தி லிருந்து விலகுவதாகவும் சொன்னார். (இதை சத்யம் தியேட்டரில் நடந்த "2.ஞ'’ ஆடியோ விழாவில் ஓப்பனாகவே ஒத்துக்கொண்டார் ரஜினி.)

Advertisment

ஆனால் "ஷங்கரின் பிரம்மாண்டத்தால், சுமார் 300 கோடிவரை பட்ஜெட் எகிறும். "நீங்கள் இல்லையென்றால் இந்தப் பட்ஜெட்டில் படத்தை எடுத்து விற்க முடியாது'’ என உண்மை நிலவரத்தைச் சொன்னதால் வேறு வழியின்றி ரஜினி நடித்து படமும் ரிலீசாகியது. படத்தின் கலெக்ஷன் ஓஹோ என இல்லை என்றாலும் மெகா பணமுதலையான சுபாஷ்கரனால் தாக்குப்பிடிக்க முடிந்தது.

இதற்கடுத்து கமல்-ஷங்கர் கூட்டணியில் "இந்தியன்-2'’படத்தை 2019-ஆம் ஆண்டு இறுதியில் ஆரம்பித்தார் சுபாஷ்கரன். காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத்சிங், ப்ரியா பவானிசங்கர், சித்தார்த் என பெரிய ஸ்டார்களுடனும் மிக பிரம்மாண்டமான செட்டுகளுடனும் ‘"இந்தியன்-2'’ஷூட்டிங் ஆரம்ப மானது.

இந்த நிலையில்தான் 2020 பிப்ரவரியில் "இ.வி.பி.' ஸ்டுடியோவில் இரவு ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது, ராட்சத கிரேன் அறுந்துவிழுந்து மூன்று பேர் பலியாகினர். அதன் பின் மார்ச்சில் கொரோனா வந்து சேர்ந்தது. "லாக்டவுன் தளர்வுகளுக்குப் பிறகு படத்தை ஆரம்பிக்கலாம்' என சுபாஷ்கரனிடம் ஷங்கர் சொல்லியுள்ளார்.

ஆனால் படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங் ஃபாரின் லொக்கேஷன் என்பதால், "இப்போதைக்கு வேண்டாம்' என ரெட் சிக்னல் போட்டுவிட்டார் சுபாஷ்கரன்.

இதனால் கடுகடுப்பான ஷங்கர், "மூன்று மொழி ஹீரோக்களை வைத்து படம் பண்ணப் போறேன்' என்ற செய்தியைக் கசியவிட்டார். இதற்கிடையே ‘"இந்தியன்-2'’ ஹீரோ கமல்ஹாசனும் "எனது சொந்த பேனரில் ‘விக்ரம்-2’ படத்தை எடுக்கப்போறேன்' என படத்தின் டிரைலரையே ரிலீஸ் பண்ணினார். ஆனால் சுபாஷ்கரனோ, ‘"எலெக்ஷனுக்குப் பிறகு ‘‘"இந்தியன்-2'’வை பார்த்துக்கலாம்' என்ற முடிவில் இருக்காராம்.

இதற்கிடையே படத்தின் ஹீரோயினான காஜல்அகர்வால் கல்யாணம் பண்ணியபின் சிரஞ் சீவியின் "ஆச்சார்யா'’படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். ப்ரியா பவானிசங்கரோ, நான்கு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

ரகுல் ப்ரீத்சிங்கோ கொரோனா வால் தனிமையில் உள்ளார். "‘"இந்தியன்-2'’எடுப்பார்களா? நம்மளக் கூப்பிடுவார்களா?' என மூன்று ஹீரோயின்களும் காத்திருக்கிறார்கள்.

ss

இந்த நிலையில்தான் ஷங்கரை இப்போதைக்கு கூல் பண்ணும் ஐடியாவில் காஜல் அகர்வால், ப்ரியா பவானிசங்கர், சித்தார்த், ஆகி யோரிடம் பிப்ரவரி மாதம் கால் ஷீட்டை ஃப்ரீயாக வைத்திருக்கும்படி லைக்காவிடமிருந்து தகவல் போயுள்ளதாம்.

-ஈ.பா.பரமேஷ்வரன்